ஓலுவில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளின் கடலரிப்பை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர அபிவருத்தி திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான மாண்புமிகு ரஊப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் '(CCD) தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
150 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் பெரும் பாறாங் கற்கள்; கொண்டு அலைகளின் தாக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்கோடு தடுப்புச்சுவரை அமைக்கும் வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப் படுகின்றன.
கடந்த மாதம் ஒலுவில் துறைமுகப் பகுதிக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர்; மாண்புமிகு ரஊப் ஹக்கீம் அவர்கள் துறைமுகத்தை அண்டிய கரையோரங்கள் வேகமாக கடலரிப்புக்கு உட்பட்டு வருகின்ற நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பரீட்சார்த்த அவதானிப்பு விஜயத்தில் கௌரவ கிழக்கு முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அவர்களும் இணைந்து அவதானங்களை மேற்கொண்டார். இவர்களோடு பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், அலிசாஹிர் மௌலானா, மாகாணசபை உறுப்பினர் நசீர், முதலமைச்சரின் செயலாளர் ஜனாப். அசீஸ், இணைப்புச் செயலாளர் பழீல் ஆகியோரும் அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேச உள்ளுர் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதேச சபை உபதவிசாளர் நபீல் மற்றும் மீனவர்களும் தலைவரிடம் கடலரிப்பின் தாக்கம் பற்றியும் அதனால் தாம் எதிர்நோக்கும் இன்னல்கள் இழப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
என்றுமில்லாதவாறு இம்முறை கடலரிப்பின் தாக்கம் கூடுதலாக இருப்பதையும் அதனால் துறைமுகத்தின் 'மஹப்பொல' கட்டிடத்தொகுதியின் சுற்றுவேலி, அடித்தளப்பகுதி வரையிலும் அரிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலைமையினை தலைவர், அமைச்சர் குழுவினர் அவதானித்தனர். சம்பத்தப்பட்ட துறைமுக அமைச்சருடன் இதுவிடயமாக பேசுவதாகவும் 'கரையோர பாதுகாப்புத் திணைக்கள' அதிகாரிகளோடு தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தலைவர் அப்போது உறுதியளித்தார்.
இதேவேளை, கடந்த ஒக். 7ம் திகதி நடைபெற்ற கட்சியின் உச்சபீடக் கூட்டத்pன்போதும் உச்சபீட உறுப்பினர் பழீல் BA இந்தகடலரிப்பு சம்பந்தமாகவும் அம்பாரை மாவட்ட கரும்புக்காணிச் செய்கையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கவனஈர்ப்பு உரையொன்றை நிகழ்த்தி அவசரமாக அவற்றை நிவர்த்திக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஏற்கனவே ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினால் போதிய நஷ்டஈடும் வழங்கப்படாமல் மீன்பிடி வாழ்வாதாரத்தையும் இழந்துநிற்கும் ஏழைமீனவர்கள் இந்த உக்கிர கடலரிப்புக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவதியுறும் நிலைமைகளை எடுத்து விளக்கினார். அரிப்பினால் அடிக்கடி மீன்வாடிகளும் அவர்களின வலைகள் உபகரணங்களும் அலையினால் காவுகொள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலைமைகளை தலைவரினதும் உறுப்பினர்களதும் கவனத்திற்கு ஜனாப்.பழீல் கொண்டுவந்தார்.
நமது கட்சிகொண்டு வந்த துறைமுகத்திட்டத்தினால் நமதுமக்கள் நமதுமக்கள் தொடாந்தும் பாதிப்புறுவதை அனுமதிக்க முடியாதென்றும் துறைமுகத்தின் வர்த்தகப் பகுதியையும் இப்பிரதேசத்திற்கும் மக்களுக்கும் நன்மையான முறையில் அமுலாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
கடந்த 6மாதங்களுக்கு மேல் பேசப்பட்டுவரும் கரும்புக்காணி விவசாயிகளின் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு கடந்தவாரம் பிரதமமந்திரி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளிடம் மாண்புமிகு தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் பேசியிருப்பதாகவும் அடுத்தவாரமளவில் அப்பிரச்சினையும் தீர்க்கப்படக்கூடிய சாதகங்கள் தென்படுவதாகவும் ஜனாப். பழீல் BA மேலும் கூறினார்.