நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 எப்படி வெடித்துச் சிதறியது என்பது குறித்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் விசாரணை அறிக்கை செவ்வாய்க் கிழமை அன்று வெளியிடப்பட்டது.
தற்போது, விசாரணை மேற்கொண்ட நெதர்லாந்து நாட்டு நிபுணர்கள் ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் விமானம் எந்த இடத்தில் பறந்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டது என்றும், தாக்கப்பட்ட பிறகு விமானத்தின் சிதறுண்ட பாகங்கள் எவ்வளவு தூரம் பறந்து சென்று விழுந்தது என்பது அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தை தாக்கிய பக் ரக ஏவுகனை பற்றிய விபரங்களும், கீழே விழுந்து கிடக்கும் விமானங்களின் பாகங்கள், விமானத்தின் ஒலிப்பதிவு கருவி, ஏவுகணையின் பாகங்களும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஏவுகனை தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.