முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார்..!

லங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான, கருப்பையா வேலாயுதம் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.

இவர் ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும் பிரபல தொழிற்சங்கவாதியுமான வேலாயுதம் பதுளை மவாட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர்.

கடந்த நல்லாட்சியில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1988ஆம் ஆண்டு முதன் முதலாக பதுளை மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேலாயுதம், அதற்கு பின்னர் 1993,1999ஆம் ஆண்டுகளில் மாகாண சபைகளில் வெற்றி பெற்றார்.

2001ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் அவர், 2004ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.

மீண்டும் அதே ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று 2009ஆண்டு தேர்தலின் வெற்றி பெற்று மாகாண சபைக்கு தெரிவானார்.

2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தெரிவு செய்யப்படாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவின் இராஜினாமாவை அடுத்து, அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இவ்ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களது சம்பளப் பிரச்சினை தீர்த்து வைக்கவும் அயராது பாடுபட்ட ஒரு தொழிற்சங்கவாதியாகும்.

மீரியபெத்த மண்சரிவு அடுத்து மலையக மக்களுக்கு பசுமை பூமி திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்க முன் நின்று செயல்பட்டார்.

அண்மைக்காலமாக சுகவீனமுற்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவில் நந்தவனம் அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலாயுதம் இன்று பி.பகல் காலமானார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -