அறியாமை காரணமாகவே நாம் பிரிந்து செயற்பட முற்படுகிறோம் -இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்


ல்கொட் நினைவு பேருரையில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கையின் ஹென்றி ஒல்கோட் ஆரம்பித்த பாடசாலைகளில் படித்த ஐக்கிய அரபு அமீர்  இராஜ்ஜியத்தில் தொழில்புரியம் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2015ஆம் ஆண்டிற்கான ஹென்றி ஒல்கோர்ட் சொற்பொழிவு டுபாய் ஹொலிடேயின் எக்ஸ்பிரஸ் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்காரினால் நிகழ்த்தப்பட்டது.

அந்த உரையிலிருந்து தொகுக்கப்பட்டது
வரலாற்று ரீதியாக உலகிலுள்ள எந்தவொரு சமூகமும் அசிங்கமான இனவாத எண்ணங்களுக்கு ஆட்படுவதன் மூலம் எதனையும் சாதிக்கவில்லையெனவும், முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தத்தங்கள் இந்த உண்மையை எமக்கு புலப்படுத்துகின்றது.


பௌத்த கோட்பாட்டின் மூலம் தமது வாழ்க்கை பயணத்தை ஒளிமயமாக்கிக் கொண்ட ஹென்ரி ஸ்ரீல் ஒல்கொட்டின் செயற்பாடு அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகும். உலகிலுள்ள பல்வேறு கலாசாரங்கள் ஒன்றாக சங்கமிக்கின்ற சிறப்பான இடமொன்றிலிருந்து ஒல்கொட்தொடர்பான
நினைவுச் சொற்பொழிவாற்றக் கிடைத்ததை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகிறேன்.


அதேபோன்று வரப்பிரசாதகமாகவும் கொள்கிறேன்.
2004ஆம் ஆண்டின் பின் அதாவது 11 வருடங்களுக்குப் பிறகு நான் வெளிநாட்டுப் பிரயாணமொன்றில் கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். விரிவுரை,

கருத்தரங்குகளுக்குப் போன்றே தனிப்பட்ட விஜயங்களுக்காகவும் கடந்த காலங்களில் எனக்குப் பல்வேறு அழைப்புக்கள் வந்தன. எனினும் அவ்வாறான அழைப்புக்கள் எதனையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் ஆனந்த என்பது நான் வளர்ந்து ஆளான இடம். ஆனந்த உட்பட ஒல்கொட்
கல்லூரிகளின் ஸ்தாபகரொருவருக்கு கௌரவமளிக்கும் நிகழ்வொன்றை என்னால் புறக்கணிக்க முடியாது.

ஒல்கொட் விரிவுரையாற்ற எனக்கு முதல் முதலாக அழைப்பு வந்தபோது உங்களைப் போன்ற


அறிஞர்களுக்கு முன்னிலையில் என்னால் எதைக் குறிப்பிடுவதென்பது தொடர்பில் எனக்குள்


அச்சம் நிலவியது. நான் தேர்தல் காலங்களில் கூட்டங்களில் உரையாற்றுவதற்கு 20 நிமிட


நேரத்தையே எடுத்துக்கொள்கிறேன். உரையாற்றிய நேரம் தொடர்பாக கூறுவதாயின், மகாத்மா


காந்தி இலங்கை வந்தபோது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி


ஜே.ஆர்.ஜயவர்தன கனேகம விகாரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதனை நான் இங்கு


குறிப்பிட விழைகின்றேன். ஒரு முறை நான் நீண்ட உரையொன்றை நிகழ்த்துமாறு மகாத்மா


காந்திக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


உரையாற்ற எழுகின்றபோது அனைவருக்கும் தெரியும் வகையில் ஒழுங்காக நின்று


கொள்ளவேண்டும். தற்போது நான் அவ்வாறே இருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து


அனைவருக்கும் கேட்கும் வகையில் உரையாற்ற வேண்டும். தற்போது நான் அவ்வாறே


உரையாற்றுகின்றேன். அதன் பின் உடனடியாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில்


அனைவரும் மகிழ்ச்சியடைவதற்கு.


பின்பற்றக்கூடிய மதத்தை தெரிவு செவதற்கு உரிமை இருக்கின்றதை போன்றே கல்வி கற்கும்


மொழியை தேர்ந்தெடுப்பதற்கும் எமது நாட்டில் சுதந்திரம் இருக்கிறது. அதன்படி சிங்கள


மொழியில் எனக்கு கல்வி வழங்குவதற்கும் ஆரம்பக் கல்வியை தொடர்ந்து என்னை ஆனந்தாவில்


சேர்ப்பதற்கும் எனது தந்தை தீர்மானித்திருந்தார். எனது தந்தையின் அந்தத் தீர்மானம்


சரியானதென நான் இன்று நம்புகின்றேன். அதற்கமைய நான் ஆனந்தவில் கல்வி கற்றது


மாத்திரமன்றி ஆனந்த விடுதியில் 7 வருட காலமாக இருந்துள்ளேன்.


அன்று ஆனந்தவில் பல்வகைத் தன்மை நிலவியது. பாடசாலையைப் போன்றே விடுதியிலும் பௌத்த,


கிறிஸ்தவ, இந்து,முஸ்லிம் சிறுவர்கள் இருந்தார்கள். ஆனந்தாவுக்குள் நாம் எந்த மார்க்கத்தை


பின்பற்றிய போதிலும் எந்தவொரு வேறுபாடும் எம்மிடையே உருவாகவில்லை. நாம் ஒரே


குடும்பம் போன்றே இருந்தோம். இல்ல விளையாட்டின் போதும் கனிஷ்ட, சிரேஷ்ட, மாணவ


சங்கங்களின் தலைமைப் பதவிகளுக்கு சகோதர மாணவர்கள் என்னை தெரிவு செத முறை எனக்கு ஞாபகம் வருகிறது. மேசை பந்து, றகர் கழகங்களுக்கு தலைமைத்துவத்துக்குப் போன்றே சிங்கள விவாதக் குழுவுக்கு தலைமை தாங்குவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கிய விதமும் எனக்கு ஞாபகம் வருகிறது.


கொழும்பு சாஹிராவின் சிங்கள மாணவன் ஒருவன் அந்தப் பாடசாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவனாக அதிபர் ரி.பி. ஜாயா தெரிவு செத முறையை தற்போது உங்களது கரங்களிலுவுள்ள

ரி.பி.ஜாயா தொடர்பான நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் 2500 வருட கால வரலாறு. இலங்கையர்களான எங்களுக்கே எரித்தான பெறுமானங்கள், எமக்குக் கிடைத்த சொத்துக்கள், இவ்வாறான சம்பவங்களிலிருந்து வரலாறுகளிலிருந்து பெருமளவு உதாரணங்களை குறிப்பிடலாம்.


உலக வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் சிறந்த உதாரணபூர்வ பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய ஆட்சியாளர்களை எம்மால் காணக் கூடியதாகவுள்ளது. அதேபோன்று அந்த மனங்களின் நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணிய சேதம் விழைவித்த நிர்வாக யுகமொன்றையும் வரலாற்றில்
காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான கால கட்டமொன்றை நாம் கடந்து விட்டிருக்கிறோம். அது மிகவும் துரதிஷ்டமானது. அந்த யுகத்தின்போது எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
பாதகங்களை கொண்டுவந்தது. அந்த துர்ப்பாக்கிய செயற்பாடுகளின் பின் நாம் எமது நாட்டு வரலாற்றில் மிகக் முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதாகவே நான் யோசிக்கின்றேன். இன்று நீங்கள் எனக்கு வழங்கியுள்ள தலைப்பானது இந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானது. எனவே எம்மனைவருக்கும் பாரிய பொறுப்புள்ளது. நாட்டின் உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் புதிய ஆரம்பமொன்றையும் புதிய எண்ணமொன்றையும் ஏற்படுத்தவேண்டும்.
அதற்காக கடந்த கால படிமங்கள் எமக்கு பலமான அத்திவாரத்தை இட்டுக்கொண்டிருக்கின்றன.

உலகிலுள்ள பிரதானமான மதங்கள் அனைத்தினது பிறப்பும், கேந்திர நிலையமும் அமைந்திருப்பது ஆசியாவிலேயாகும். குறிப்பாக எமது சமூகத்தை போஷிக்கின்ற பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்ற பிரதான மார்க்கங்கள் உருவாகி இருப்பதும் மத்திய கிழக்கு மற்றும் பாரதத்திலிருந்தாகும். 

இலங்கையின் ஆரம்பம் தொடர்புபடுவதும்
இவ்வரலாற்று தேசங்களோடாகும். இவ்வனைத்து மதங்களும் கூறுகின்ற வழிகாட்டல்களில் பெரும்பாலானவற்றில் சமத்துவம் நிலவுகின்றது.

எமது சமூகத்தை முழுமை பெறச் செயக்கூடிய இவ்வனைத்து பெறுமானங்களையும் அடிப்படையாகக் கொண்ட பொதுப் பயணமொன்றை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எம்மிடையே காணப்படும் பல்வகைத்
தன்மையை வளமாக கருத வேண்டியிருந்தது. இதனை சுமையாக கருத வேண்டியதில்லை.


வரலாற்று பதிலில் எந்தவொரு சமூகமும் அசிங்கமான இனவாத எண்ணங்களுக்கு ஆட்பட்டு சிறப்படைந்ததாக இல்லை. முதலாவது, இரண்டாவது உலக மகா யுத்தங்கள் இந்த உண்மையை எமக்கு
புலப்படுத்துகின்றது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்துவரும் சம்பவங்களின் மூலம்


இது உறுதியாகிறது. இந்த நிலை தொடர்பாக அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகத்


தலைவர்கள் மீது விரல் நீட்டப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். பல்வேறு சதிகள், மறைவான


நிகழ்ச்சி நிரல்கள், இதற்கு காரணமாக இருந்து வருகின்றன என்ற செதியையும் நாம்


கேட்கின்றோம். எனினும் சமூகமொன்றின் அனைத்து பிரிவினருக்கும் இது தொடர்பாக


பாரிய பொறுப்புள்ளது. கூறப்படுகின்ற விடயங்களைப் போன்றே இடம்பெறுகின்ற


விடயங்கள் தொடர்பிலும் விழிப்போடு இருப்பது மட்டுமன்றி மிகவும் ஆழமாக அறிவதும் மிக


முக்கியமாகும்.


அந்த பொறுப்பை விளங்கியவர்களென்ற வகையில் முக்கியமான கருப்பொருளொன்று


தொடர்பில் எம்மிடையே பிணைப்பொன்றை ஏற்படுத்துவதற்காக நீங்கள் நடவடிக்கை


எடுக்கிறீர்கள். ஒல்கொட்டை நினைவூட்டுவதற்காக இந்த பொருத்தமான தலைப்பை தேர்வு செதிருப்பது


உங்களது முக்கிய தீர்மானமொன்றாகவே நான் சிந்திக்கின்றேன். ஐக்கிய அரபு


இராச்சியத்தில் வசிக்கின்ற இலங்கையர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கருவை


மையப்படுத்தி ஏற்பாடு செதுள்ள நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்ததை சிறப்புச் சந்தர்ப்பமாக


கருதுகிறேன். இந்தச் சந்திப்புக்காக நீங்கள் எனக்கு விடுத்த அழைப்பிற்கான அடிப்படை


விடயத்தை நான் மதிக்கின்றேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.


இது ஒரு புறம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு பாடமென்பதை எமக்கு நினைவுட்டுவதோடு


மறுபுறம் கடமையை நிறைவேற்றுவதுமாகும்.


நன்றியுணர்வு, கடமையுணர்வு போன்ற உதாரண குணங்களை உங்களுக்கும், எனக்கும் எமது


வாழ்க்கையோடு நெருங்கச் செவித்தது எமக்கு எழுத்தறிவித்த பாடசாலையென்பதை கௌரவமாக நினைவு


கூர்கின்றேன்.


நீங்களும் நானும் கல்வி கற்ற பாடசாலைகளில் பொதுவான இலச்சினையொன்று இருக்கிறது. அது


இலங்கையில் பௌத்த புனர்ஜீவியத்தின் அடிப்படையில் பாடசாலையில்


ஆரம்பிக்கப்பட்டிருப்பதென்பதாகும். அது தொடர்பாக அர்ப்பணித்த கேர்ணல் ஹென்றி ஸ்ரீல்


ஒல்கொட் பௌத்த கோட்பாடுகளால் தமது வாழ்க்கையை ஒளியமயமாக்கிக் கொண்ட ஒரு புருஷர்.


ஒல்கொட் பெற்றெடுத்த பாடசாலை அன்னையின் குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்வதற்காக


நினைவுச் சnhற்பொழிவுகளை ஏற்பாடு செவது புத்த பெருமானாரின் சிறந்த குணப்பண்பான


நன்றியுணர்வை முழு உலகுக்கும் பறைசாட்டும் வகையிலாகும். அன்னவர்கள் தமது புத்தத்துவத்துக்கு


உறுதுணையாக இருந்த போதிக்கும் ஒருவார காலம் பூசை வழிபாடு நடத்தியமை நன்றியுணர்வை


மேலும் பறைசாற்றும் வகையிலாகும்.


இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து நீங்கள் மேற்கொண்டுவரும்


பணியை நாமும் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.


மிசிசிப்பி நதிக் கரையிலிருந்து கவிஞர் மார்க்ட்வெத் ஒருமுறை கருத்துக் கூறும் போது, ஒரு


சில மனிதர்கள் அவர்களது பொறுப்புக்களை நிறைவேற்றும் போது அதன் அதிர்வு பல


மைல்களுக்கு அப்பால் ஒலிரக்கூடியதாக இருக்குமென்றாகும். உண்மையில் ஒல்கொட் உருவாக்கிய


கல்லூரித்தாயின் குழந்தைகளான நீங்கள் மேற்கொள்ளும் நன்றியுணர்வின் அதிர்வானது


இலங்கையிலுள்ள நன்றியுணர்வுள்ளவர்களது கண்களுக்கும், மனதுக்கும் தெரியும், உணரும் என்பது


உறுதியானது.


ஆயிரக்கணக்கான மைல் தூரத்துக்கு அப்பாலிலிருந்து ஒல்கொட்டின் இலங்கை பயணம்


இடம்பெறுவதும் அவ்வாறான கடமையொன்றினை மேற்கொள்ள வேண்டிய உணர்வு அமெரிக்காவில்


வாழ்ந்து வந்த அவரிடம் அதிரத் தொடங்கியனவாகும்.


காலனித்துவத்தால் பேரழிவுகளுக்குள்ளான இலங்கையை கல்வி தொடர்பாக தோல்வியடையச் செவதற்கு


மேற்கொண்ட முயற்சிக்கெதிராக இடம்பெற்ற ஐம்பெரும் விவாதங்கள் ஒல்கொட்டின் இலங்கை


விஜயத்துக்கு வழிகோலியது.


1988இல் பத்தேகமவில் இடம்பெற்ற வாதமும் 1966இல் உதம்மிடயில் இடம்பெற்ற வாதமும்,


1873இல் மிகவும் தீர்க்கமான வாதமொன்றாக இடம்பெற்ற பாணந்துறை வாதத்தினதும்


அதிர்வானது ஒல்கொட்டின் இலங்கை விஜயம் தொடர்பான வரலாற்றுக் காவியத்தின் வித்தாகும்.


ஒல்கொட் இலங்கையில் பௌத்த எழுச்சிக்குத் தம் பங்களிப்பைச் செலுத்த எதிர்பார்த்தது நாட்டின்


முன்னேற்றம் காணாத பகுதிகளில் வாழும் பிள்ளைகளுக்கு பளனுள்ள கல்வியை வழங்குவதற்காகும்.


கல்வியின் நோக்கம் பற்றி ஒல்கொட் கோட்பாட்டை அடையாளம் காண்பது மிக முக்கியமானது.


அது நாம் இன்று அவதானம் செலுத்தும் தேசிய ஒற்றுமை பற்றிய சௌஜன்யத்துக்கு வழிகாட்டுவதாக


அமையும்.


ஹென்றி ஒல்கொட் 1875 நவம்பர் மாதம் 17ஆம் திகதி அமெரிக்காவில் ஆரம்பித்த


விஞ்ஞானந்த நிறுவனத்தின் நோக்கத்தை சுருக்கமாகக் குறிப்பிடுவது நன்று என்று


கருதுகிறேன். நிற, இன, குல, சமய பேதங்களில் உண்மையைத் தேடும் நோக்கில் அவர் அவர்


ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டது.


முதலாவது நோக்கம் நிற, இன, சமயம் போன்ற எந்த பேதமுமில்லை. முழு மனித சமூகத்தையும்


ஒரு சகோதரர்களாகப் பின்னிப் பிணைந்து வைப்பதாகும். இரண்டாவது சகல சமயங்களும்


பாரபட்சமற்ற வகையில் மேம்படுத்த ஊக்குவித்தல். மூன்றாவது இயற்கை மற்றும் மனிதர்களது


உள்ளக சக்தி பற்றி ஆய்வு நடத்துதல்.


தற்போது நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இந்த நோக்கங்களை


அடையாளப்படுத்தினால் தீர்வு காண்பது கடினமானதல்ல.


இனவாத மதவாத உருவிலேயே உலகெங்கிலும் நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன. ஓரினம்


மற்றோர் இனத்தை அடக்கியாள முயற்சித்தல் அல்லது ஒரு மதக்கோட்பாட்டை மற்றொரு மதத்தால்


இகழச் செய்வதற்கு முற்படுவதனையும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான உலகொன்றுக்கு ஒல்கொட்


காட்டித்தந்துள்ள வழி எந்தளவு பிரயோசனமானது. ஒல்கொட் கல்லூரியின் புதல்வர்களான நாம்


அனைவரும் மீண்டும் இந்த கோட்பாட்டை மீள்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது


எனது நம்பிக்கையாகும்.


லோன் பெப்லர் எனும் கோட்பாட்டாளர் குறிப்பிடுகிறார், அசலான பயங்கரவாதம் என்பது


இனவாதமென்பதாகும். இனவாதிகள் என்பது மனித சமூகத்தை அழிக்கின்ற மூர்க்கவாதிகள்


என்போராகும் என லெனின் குறிப்பிட்டுள்ளார்.


ஓர் இனம் மற்றொரு இனத்தினால் அடக்கியாளப்பட்டிருக்கும் வரை இனத்துக்கு தலைமைத்துவம்


வழங்குவதென்பது உள்நாட்டு உணர்வாகும். தமது தாயகம் தமக்கு இல்லாமாக்கி இருப்பின் அதனை


பெற்றுக்கொள்வது சுயதேசப்பற்றாகும். நெருக்கடிகளுக்குள்ளான இனமொன்றுக்கு சவால்கள்


என்பது சர்வசாதாரணமானது.


போராட்டங்கள் முடிவு பெறுவது வாய்ப்பேச்சுக்களால் அல்ல. தேசிய போராட்டங்கள் முடிவு


பெறுவது தேசிய சுதந்திரம் கிடைத்த பின்பே.


ஏனைய இனங்களின் சுதந்திரத்தை காணாதவர்கள் தமது தேசிய சுதந்திரத்தை காண மாட்டார்கள்.


ஆயுதங்களால் ஒரு சமூகத்தை அடிபணிய வைக்க முடிவது குறுகிய காலத்திற்கென்பதை உலக வரலாறு


மழுவதும் நாம் கண்ட ஒன்றாகும்.


ஒல்கொட்டின் கோட்பாடு மூலம் நாம் சமத்துவம், சௌஜன்யம் மூலம் உலகை கட்டியெழுப்பக்கூடிய


வழிமுறையைக் காண்போம்.


நாம் பிரிந்து செயற்பட முற்படுவது அறியாமையினால் என்பதை அவர் தெளிவாக சுட்டிக்


காட்டியிருக்கிறார். சகல சமயங்களையும் பக்கச்சார்பின்றி மேம்படுத்தப்படுவதற்கு விடுத்துள்ள


வேண்டுகோளிலிருந்து இது தெளிவாகின்றது.


அன்னிய மதங்களை கௌரவிக்காதவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்ல என்று தர்மாசோக மன்னன்


கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் இதனை தெளிவுபடுத்துகின்றது.


இவை அனைத்தின் மூலமும் நாம் ஒல்கொட்டின் கோட்பாடுகளை ஆழமாக சமூகமயப்படுத்தவேண்டிய


யுகத்துக்கு வந்துள்ளோம்.


இலங்கை வரலாற்றில் மிகவும் கசப்பான


காலத்தை நாம் கடந்துள்ளோம். இது மிகவும் துரதிஷ்ட வசமானது. அக்காலத்தில் எமது நாட்டின்


பெயருக்கு களங்கமும் பாதிப்பும் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளின் பின்பு நாம் எமது நாட்டின்


வரலாற்றின் ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளோம். நீங்கள் எனக்கு தந்துள்ள தலைப்பு இந்த


சந்தர்ப்பத்துக்கு


பொருத்தமானது. அது குறித்து எம் எல்லோருக்கும் பாரிய பொறுப்புள்ளது.


உலகின் சகல மதங்களினதும் பிறப்பு ஆசியாவி


லேயே இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எமது சமயத்தை போதிக்கும் பௌத்த, இந்து,


கத்தோலிக்க, இஸ்லாமிய சமயங்கள் ஆரம்பிப்பது மத்திய கிழக்கிலும் பாரதத்திலுமாகும்.


இலங்கையர்களான எமது மூலம் இந்த வரலாற்று தேசங்களுடன் தொடர்புடையது. இந்த சகல மதங்களும்


எமக்கு வழிகாட்டும் சமத்துவங்கள் அனேகமுள்ளன. தம்ம பதத்தில் ஒரு செயலைச் செய்த பின்


அதுபற்றி மீண்டும் நினைவு படுத்தப்படும்போது அதனை மீண்டும் செய்வது நல்லது என்று


கூறப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு செயலை செய்த பின் அதனை மீண்டும் நினைவு படுத்துத்தும் போது


பச்சாதாபம் படுவதாயின் அவ்வாறான செயல்களை தவிர்ப்பது நல்லது.


இதேபோன்று நினைவுக்கு வருவது பிரபல ஹவாட் பல்கலைகழகத்தின் சட்ட பீட நுழைவாயிலில்


காட்சிப்படுத்தப்பட்டுள்ள அல்குர்ஆன் வாக்கியமாகும். அதன் கருத்தை நான் உங்களுக்கு கூற


விரும்புகின்றேன்.


'நீதியாக நடவுங்கள். அது உங்கள் பெற்றார் அல்லது உறவினர்கள் நண்பர்களுக்கு எதிராக


இருந்தாலும் நீதிக்காக தோன்றுங்கள் இறைவன் உங்களை பாதுகாப்பான்'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -