தமிழ்ச் சிறைவாசிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டும் - சேகு இஸ்ஸத்தீன்

சப்றின்-
ட்டத்திற்கு தேவைப்படும் தகுந்த ஆதாரங்கள் இவ்வளவு நீண்ட காலமாக கிடைக்காத போதும், இனிமேலாயினும் அவற்றைத் தேடிப்பெறலாம் என்பதற்கான எதுவித ஏதுவும், நம்பிக்கையும் வெளிப்படுத்தப்படாத நிலையிலும், சட்டத்தீர்ப்புக் கிடைக்காமல் ஆயுட்கால சிறைக்கைதிகளைப் போல தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சிறைவாசிகளை சட்டத்திற்குத் தேவைப்படும் ஆதாரங்கள் கிடைக்கும் போது திரும்ப அழைத்து எடுத்துக் கொள்ளக்கூடிய விதத்திலாவது நீதித்துறை பொருத்தமெனக் கருதும் பிணை மூலம் அவர்களை விடுவிப்பதற்கு எல்லாருக்கும் பொதுவான இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த தமிழ்ச் சிறைவாசிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டும் என்று முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கச் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸத்தீன் கூறினார். 

அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் தேசியவாதிகள் இயக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் - ஆதாரம் இல்லாது போனால், பலத்த சந்தேகத்தையும் அனுமானத்தின் அடிப்படையிலானதாகவே சட்டத்தில் கருத முடியும். எனவே, அந்த சந்தேகத்தின் பேரில் குற்றத்தை நிரூபிக்கவோ, தண்டனை வழங்கவோ சட்டத்தில் இடமில்லை. 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒருநிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது|| என்ற நீதிமொழி சொல்லிச் சொல்லி திருப்திப்பட்டுக் கொள்ளுவதற்கென்று சொல்லப் பட்ட விசயமல்ல. 

கருணை, மனிதாபிமானம் என்ற நியாய அடிப்படைகளை தற்சமயத்திற்கு ஒதுக்கிவைத்து விட்டு,சட்டத்தேவைப்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலும், ஆதாரம் கிடைக்கும் வரை எவரையும் - அவர் சாகும் வரையிலென்றாலும் சரியே - சந்தேகசத்தின் பேரில் ஆயுள் குற்றவாளியாக அடைத்து வைத்திருக்க சட்டமோ அல்லது சட்டத்தின் பாதுகாவலர்களோ இடமளிப்பதாக விருந்தால், அந்தச் சட்டம் அவசர அவசரமாக மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும். 

இந்த நாட்டுச் சட்டமுறைமை, அமைப்புகளின் மீதுள்ள அதிருப்தி காரணமாகத்தான் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுத்துவருகிறது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் வருடக் கணக்காக அடைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைவாசிகளை, தகுந்த ஆதாரம் கிடைக்கப் பெறும் வரையிலாவது, பொருத்தமான பிணையிலேனும் விடுவித்து, பாதிக்கப்பட்டவர்களின் பெண்கள், பிள்ளைகளினது நெஞ்சுப் பாரத்தைக் குறைக்க நீதி தேவதையின் பேரால் இந்த எல்லாருக்கும் பொதுவான நல்லாட்சி அரசாங்கம் தாமதிக்காது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -