ஜாலியாக சண்டைப்போட்டபோது கல்லால் தாக்கிக்கொண்ட அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பேரையூர் கண்ணாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மூத்த மகன் வெங்கடாசலம்(55). போலீசான இவர் பிரச்னை காரணமாக சஸ்பெண்ட்டில் உள்ளார். இவரது தம்பி செல்லச்சாமி(50). விவசாயம் செய்கிறார். சகோதர்கள் பகல் முழுவதும் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு இரவானதும் மது குடிப்பது வழக்கம். ேபாதை ஏறியதும் சொத்து பிரச்னை தொடர்பாக ஜாலியாக சண்டைப் போடுவார்களாம். இவர்களின் சண்டையை ஊர்மக்கள் வேடிக்கை பார்ப்பார்களாம்.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் மது குடித்துவிட்டு சொத்து பிரிப்பது தொடர்பாக சண்டையிட்டு உள்ளனர். திடீரென ஒருவருக்கு ஒருவர் கல்லால் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்த பொதுமக்கள், ‘ஜாலியாக சண்டை போடுகிறார்கள்’ என்று கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.
திடீரென இருவரும் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அருகே சென்று பார்த்தனர். செல்லச்சாமி இறந்துகிடந்தார். மயங்கி கிடந்த வெங்கடாசலத்தை பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் வெங்கடாச்சலம் உயிரிழந்தறித்து விட்டார். புகாரின்படி பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.