கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம்...!

தர்ஜுமில்லத்-
கௌரவ கிழக்கு மாகாண மாண்புமிகு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களது ஆலோசனையின் பேரில் கிழக்குமாகாண முதலமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான ஜனாப். U.L.A.அஸீஸ் அவர்களது நெறிப்படுத்தலுடன் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப் M.Y..சலீம் அவர்களதும், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜனாப்.A.J.M.இர்ஸாத் அவர்களதும் வழிகாட்டலின் கீழும் மேற்படி கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டமானது பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குள் லகுகலை, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளின் ஊழியர்களின் பங்குபற்றலுடன் 2015.10.15 ஆம் திகதி மு.ப.06:30மணிமுதல் பொத்துவில் பஸ்தரிப்பிட வளாகத்தில் ஆரம்பித்து கிராமம் முழுவதும் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பிரதேச சபையின் செயலாளர் M.C..ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார். அத்தோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் நெறிப்படுத்தல் மற்றும் ஏனைய பணிகளை முன்னெடுத்தனர். குறித்த நிகழ்வினை சிறப்பாக ஆரம்பம் செய்வதற்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் N.M.M.முஸர்ரத் முன்னாள் பிரதேசசபையின் தவிசாளர் M.S.அப்துல் வாஸீத் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் A.M.M.இஸ்ஸடீன் பொத்துவில் சுகாதா வைத்திய அதிகாரி M.M.சமீம், விசேட சுகாதாரப் பரிசோதகர் M.S.M.அப்துல் மலீக் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் A.M..றபீக் அவர்களுடன் திருக்கோவில், லாகுகல பிரதேச சபைகளின் ஊழியர்களும் இன்னும் பலரும் கலந்து சிறப்பான முறையில் ஆரம்பித்து வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -