நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பகிரங்கப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்கு 56 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பதால், அமர்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.
இதனடிப்படையில், ஒரு மாதத்தில், மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் மற்றும் ஒரு வருடத்தில் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பகிரப்படுத்துமாறும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
இந்த யோசனை செயற்படுத்தப்பட்டால், மக்கள் தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினையில் எந்தளவிற்கு தலையிடுகின்றனர் என்பதை மக்களால் கண்டறிய முடியும் எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.