தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு சர்வோதய விருது...!

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு சர்வோதய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒப்படைக்கப்பட்ட கடமைகளை பக்கச்சார்பின்றி, எவருக்கும் அடி பணியாது, தைரியமாக மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வோதய அமைப்பின் தலைவர் ஏ.ரீ.ஆரியரட்னவின் ஆலோசனைக்கு அமைய சர்வோதய தேசிய விருது வழங்கும் நிகழ்வு இம்முறை 18ம் தடவையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய பங்கேற்றிருந்தார். மொரட்டுவை சர்வோதய தலைமையகத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் நாட்டுக்கு ஆற்றப்பட்ட சேவைகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேவநாயகம் ஈஸ்வரன், பேராசிரியர் சந்திரா குணவர்தன, துசித மலலசேகர, மனிகே சுமனசேகர ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.சபாநாயகர் கரு ஜயசூரிய, ஏ.ரீ. ஆரியரட்னவிற்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -