தேசியகுறும் திரைப்படவிழா போட்டிக்கு விண்ணப்பம் கோரல்..!

எம்.ரீ.எம்.பாாிஸ்-
தேசியகுறும் திரைப்படவிழா “ஐக்கியஅடையாளம் வித்தியாசங்களில் சமத்துவம்” சமாதானம், சகவாழ்வு, பல்வகைத்துவம் ஏனைய சமயங்களையும் சமூகங்களையும் மதித்தல் மற்றும் விழுமியங்களைக் கடைப்பிடித்தல் போன்றவிடயங்களை இளைஞர் யுவதிகளிடம் ஏற்படுத்தும் பொருட்டுகிராமியப் பொருளாதாரமற்றும் சமூகஅபிவிருத்திஅமைப்பினால் “தேசிய குறும் திரைப்பட விழா” போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த “தேசிய குறும் திரைப்பட விழா” யிற்கான ஆக்கங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பதாரிகள் 18-25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதற்குமுன் குறும் திரைபட ஆக்கங்களில் அனுபவம் உள்ளவர்ள் பற்றியும் அதற்கான விருதுகளோ சான்றிதழ்களோ பெற்றவர்கள் பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கு முன் அனுப்பல் வேண்டும்.

விண்ணப்பங்களிலிருந்து சிங்கள் மற்றும் தமிழ் மொழி மூலமான 30 இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்படுவர். இவர்களுக்கு முதலில் 5 நாட்கள் குறும் திரைப்பட தயாரிப்புபற்றிய பயிற்சிநெறியொன்று வழங்கப்படும். இதற்குப் பின் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் பங்குபற்றுனர்கள் தங்களால் ஆக்கப்பட்ட குறும்திரைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும். இவற்றில் மிகச் சிறந்த மூன்று குறும் திரைப்படங்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்படும். அத்தோடு மேலும் ஏழு குறும் திரைப்படங்கள் குறும்திரைப்பட விழா தினத்தில் காட்சிப்படுத்தப்படுவதோடு பத்து குறும் திரைப்படங்களும் தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்துதரப்படும்.

மேற்குறித்த விடயத்தில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பின்வரும் முகவரிக்கு பூரணப்படுத்தப்பட்ட தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கிரமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு
481,பிரதானவீதி,
கந்தளாய்.
0777073441
0718161660
E-Mailrecdosl@gmail.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -