கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் வடக்கு விவசாய அமைச்சால் திறப்பு..!

பாருக் சிஹான்-
டமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2.5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார்.

இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 5000 மெற்றிக்தொன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலும் பெரும்பங்கு முல்லைத்தீவின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கொக்குளாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களிலேயே விளைவிக்கப்படுகிறது. 

இதைக் கருத்திற்கொண்டே, கொக்குத்தொடுவாயில் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன், வ.கமலேஸ்வரன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -