ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு..!

ந.குகதர்சன்-
ர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வும், நங்கூரம் மலர் வெளியீட்டு விழாவும் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மணிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் பீ.குணரெட்னம், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீறாசாகிப், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்;ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் நங்கூரத்தின் விமர்சன உரையினை எழுத்தாளர் ஓட்;டமாவடி அறபாத் நிகழ்த்தியமுடன், சிறப்பு உரையினை மௌலவி ஏ.எல்.முஸ்தபா நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -