பி.எம்.எம்.எ.காதர்-
கடந்த சர்வதிகார ஆட்சியில் எங்கள் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை இருந்தது.அந்த ஆட்சி தோற்கடிக்கப்பட்டு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரின் கீழ் நல்லாட்சி உருவாகியிருக்கின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திவிநெகம பயனாளிகளின் உற்பத்தி; வர்த்தக் கண்காட்சி நேற்று(12-10-2015)திங்கள் காலை கல்முனை 'கிரீன் பீல்ட்'வீட்டுத் திட்ட முன்றலில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்து உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த வர்த்தக் கண்காட்சியில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, மற்றும் சிறப்பு அதிதிகளாக கணக்காளர் எம்.எம்.எம்.ஹூசைனுதீன், திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கே.ராஜதுரை, ஆகியோரும் கலந்து கொண்டனர்.மேலும் திவிநெகும மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர், திவிநெகும வங்கி முகாமையாளர்களான எம்.எம்.எம்.முபீன்,எஸ்.சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்தாவது:-
சமூர்த்தித் திட்டம் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இருந்த காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த எஸ்.பி.திசாநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.தற்போது அவரிடமே அந்தத் திணைக்களம் வந்திருக்கின்றது எனவே பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டியவற்றை எடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
கடந்த சர்வதிகார ஆட்சில் மக்களுக்கு எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது தற்போது மக்கள் விரும்பிய நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான விடையங்களை தாராளமாக செய்ய முடியும். திவிநெகும பயனாளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்ருடனும், அதிகாரிகளுடனும் பேசியிருக்கின்றேன் விரiவில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும்.
திவிநெகும பயனாளிகள் தங்கள் சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் தொடர்ந்தும் உதவி பெறுகின்றவர்களாக இருக்கக்கூடாது வருமானங்களை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளைத் தேடிக்கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரிஸ் மேலும்; தெரிவித்தார்.