இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிழக்கு விஜயம்..!

கே.சி.எம்.அஸ்ஹர்-
கிழக்கின் அம்பாரை,மட்டக்களப்பு ,திருகோணமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அதிபர்கள்,ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் ஒன்றுகூடல் நிகழ்வு நிந்தவூர் அல்.அஸ்ரக் ம.வி.இல் திரு.அஹமட் அதிபர் தலைமையில் நடைபெற்றது.இதில் அதிபர்களாலும்,ஆசிரியர்களாலும் பின்வரும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

1.அதிபர் தகைமை இருந்தும் பாடசாலைப் பொறுப்பு வழங்கப்படாமை.
2.ஒரே பரீட்சைமூலம் தெரிவுசெய்யப்பட்ட அதிபர்களிடையே பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகின்றமை.
3.வயது அடிப்படையில் தடைதாண்டல் பரீட்சையில் விலக்களி;க்கப்படாமை
4.புதிய அதிபர் பிரமாணக்குறிப்பில் உள்ள சவால்கள் உ:ம் ஆங்கிலமொழி சித்தி
5.பரீட்சை கடமைகள் வழங்குவதில் பாரட்சம்
6.வழக்குப் போட்டு வென்ற உங்களுக்கு எப்படிப் பாடசாலைப் பொறுப்பு தரமுடியும் என்ற அதிகாரிகளின் வினா.
7.ஆசிரியர் அதிபராகவும்,அதிபர் ஆசிரியராகவும் செயற்படுகி;றமை
8.98,23 க்கு முரணாக போட்டிப்பரீட்சை நடாத்தாமல் பதில் அதிபர் நியமனம்
9.பட்டதாரி பயிலுனர்களாக இருந்து ஆசிரியர் சேவைக்குள் நுழைந்தோருக்கு சேவைக்காலம் உள்வாங்கப்படாமை
10.பதவி உயர்வு நடவடி;க்கைகள் தாமதம்
11.இரு வருட சம்பள நிலுவைகள் இன்மை 2009.2010
12.நிலுவைகள் 2011 முதல்
13.நிலுவைகள் பெறுவது பெரும் கடினமாக உள்ளது.
14.தரம் 1 அதிபர்கட்கும்,தரம் 1 ஆசிரியர்கட்கும் தீர்வையற்ற வாகனம் வழங்கப்படாமை.
15.போட்டிப்பரீட்சை இன்றி சுற்றுநிருபத்தை மீறி ஆசிரிய ஆலோசகர் நியமனம் வழங்கப்படுகின்றமை.
16.இடருதவிக் கடன் பெறமுடியாமை
17.நீண்டகாலம் வெளிவலயங்கில் வேலை செய்தும் இடமாற்றம் பெறமுடியாமை.

மேற்படி பிரச்சினைகளை அவதானித்த ஆசிரியர் சங்கச்செயலாளர்.இவற்றை உரிய அதிகாரிகள்,மாகாணக்கல்வி அமைச்சர்,ஆளுநர்,கல்வி அமைச்சர் போன்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும்,சில விடயங்களை நீதிமன்றம் சென்று உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்ததுடன் சுற்றுநிருப சட்டதிட்டங்களைச் சரியாகி விளங்கி அதன்படி அணுகினால் இலகுவாக வெல்லலாம் என்றார்.

நாடு தழுவியரீதியில் ஆசிரியர்களின் கையொப்பங்களைத் திரட்டி.இலங்கை ஆசிரியர் சேவை புதிய பிரமாணக் குறி;ப்பின்
குளறுபடிகளைத்தீர்த்து உடன் தரமுயர்வை வழங்கும்படி கல்வியமைச்சரிடம் கோரி;க்கை விடவு;ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க இணைப்பாளர் உதயருபன், அக்கரைப்பற்று இணைப்பாளர். திரு.அபாஜூல்பான், கல்முனை, சம்மாந்துறை இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -