பாடசாலைகளில் விழுமியப் பண்புகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும் இணைப்பாளர் அறூஸ்..!

ஐ. ஹுஸைன்தீன்-
ல்வியானது மனிதவள மேம்பாட்டிக்கும், மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாட்டின் வளமான எதிர் காலம் அந்நாட்டின் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது என்று தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமானி பட்டக் கற்கை நெறியின் அட்டாளைச்சேனையின் பிராந்திய இணைப்பாளரும் விரிவுரையாளருமான எஸ்.என்.ஏ.அறூஸ் தெரிவித்தார்.

கல்விமானி பட்டக் கற்கை நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான விடுகை விழா அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியில் அன்மையில் எம்.எஸ். கபீர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடந்து உரையாற்றுகையில் பாடசாலையானது பரந்து விரிந்த ஒரு சமுதாயத்தினுள் இயங்குகின்ற ஒரு தொகுதியாகும். சமுதாயத்தின் தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுகின்ற இடமாக பாடசாலை காணப்படுகின்றது. பாடசாலைக்கும் சமுதாயத்திறு;கும் இடையிலான சிறப்பான தனியாள் இடைத் தொடர்புகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

கல்விமானி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் சிறந்த பண்புசார் விருத்தியை ஏற்படுத்தி சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். இன்று மாணவர்களிடம் விழுமியப் பண்புகள் அருகிவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. விழுமியக் கல்வியின் தேவை ஒவ்வொரு மனித உள்ளங்களுக்கும் அவசியமாகவுள்ளது. இதன் அடிப்படையில் சமய கலாசார விழுமியங்களை இணைப்பாட விதானம், பாடவிதானமூடாக செயற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் முன்னின்று உழைக்க வேண்டும். 

மேலும் பாடசாலைகளில் காணப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் மாணவர்கள் நடத்தையில் தாக்கத்தைச் செலுத்துகின்றது. இவைகள் மேம்;படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களினால் விரிவுரையாளர்களுக்கு பரிசிலகள்; வழங்கி கொளரவிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -