பாபர் வீதி கோவில் விவகாரத்தில் முஸ்லிம்களை இனவாதிகளாக காட்டியவர் மனோ கணேசனே - உலமா கட்சி

பாபர் வீதி இந்துக் கோவில் தேர்த்திருவிழாவை ஊதிப்பெருப்பித்து கொழும்பு முஸ்லிம்களை இனவாதிகளாக காட்டியவர் மனோ கணேசனே என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

கொழும்பில் பல்லாண்டு காலமாக தமிழர்களும் முஸ்லிம்களும் பரஸ்பர புரிந்துணர்வுடனேயே வாழ்கிறார்கள். பாபர் வீதியில் உள்ள சம்பந்தப்பட்ட ஒழுங்கையூடாக தேரை கொண்டு வருவது சிரமமான காரியம் என்றும் அதனை பிரதான வீதியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றே சில முஸ்லிம்களால் சொல்லப்பட்டதே தவிர தேர்த்திருவிழாவே கூடாது என எவரும் அங்கு சொல்லவில்லை என்பதை அறிகிறோம். 

ஆனால் இதனை வைத்து தேரை முஸ்லிம்கள் தடுத்து விட்டார்கள் என்பது போல் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் மத ரீதியிலான முறுகல் இருப்பது போல் காட்டியது அமைச்சர் மனோ கணேசன்தான். இதன் மூலம் அமைத்pயாக இருக்கும் இனங்கள் மத்தியில் வேண்டுமென்றே பகையை ஏற்படுத்தி அதன் மூலம் அவர் அரசியல் லாபமடைய முயற்சித்துள்ளார்.

இந்தப்பிரச்சினை சம்பந்தமாக மனோ கணேசனின் அமைச்சில் சில முஸ்லிம்களையும் கூட்டி கூடிய கூட்டத்தில் தேரை ஒழுங்கையில் இருந்து ஆரம்பிக்காமல் பிரதான வீதியிலிருந்தே ஆரம்பிப்பது என சுமுகமாக முடிவு காணப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தரப்பு கூறியுள்ளது. இதைத்தான் பாபர் வீதி ஒழுங்கை முஸ்லிம்களும் ஏற்கனவே குறிப்பிட்டனர். 

அதனை ஏற்காமல் இதனை பிரச்சினையாக பூதகரமாக்கிய மனோ கணேசன் தற்போது ஏற்கனவே முஸ்லிம்கள் சொன்ன யதார்த்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் இல்லாத பிரச்சினையை இவர் இருப்பதாக காட்டியுள்ளார் என்பதுதான் தெளிவாகியுள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் தங்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்வதற்காக இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்த வேண்டாம் என உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -