சம்மாந்துறை- வயலில் கைக்குண்டு மீட்பு..!

ம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் 12ஆம் குடியேற்றப்பகுதி நெல் வயலிலிருந்து திங்கட்கிழமை (12) கைக்குண்டொன்று மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வயலை உழுதுகொண்டிருந்த வேளையில், மண்ணுக்குள்ளிருந்து தென்பட்ட இப்பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, அது கைக்குண்டெனத் தெரியவந்தது. 

இது தொடர்பில் மல்வத்தை இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து வந்த கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 

யுத்த காலத்தில் புதையுண்ட பழைய கைக்குண்டாக இருக்கலாமென்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -