வடக்கு முஸ்லிம்களுக்காக அணி திரள்வோம்..!

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழிழ விடுதலைப்புலிகளினால் 2 1/2 மணித்தியால காலக்கெடுவுக்குள் ஆயுத முணையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கிறோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) அன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கிறோம். 

விடுதலைப்புளிகள் ஆயுத முணையில் முஸ்லிம்களை விரட்டியடித்தது முதல் இன்றுவரை 25 வருட காலமாக மிகவும் கஷ்டப்பட்டு அம்மக்கள் வாழ்கின்றனர். யுத்தம் நிறைவடைந்து வடக்கில் தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர். சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்திய அரசாங்கம் முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டவில்லை. அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. 

இந்நிலையில் நல்லாட்சி ஏற்பட்டு இந்த புதிய அரசாங்கத்திலும் அந்ந முஸ்லிம் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். எனினு இவர்கள் இதுவரை முஸ்லிம்களின் மீள்குடியேற்றதை சாத்தியப்படுத்துவதற்கு எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

எனவே இந்த அரசாங்கத்திற்கு நாம் ஜனநாயக முறையில் எமது அழுத்தத்தை கொடுத்து அப்பாவி முஸ்லிம்களுக்கு உதவிசெய்வோம். இது காலத்தின் தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -