புதிய வரவு செலவு திட்டத்தில் தோட்ட பகுதிகளை கிராமமயமாக்குவேன் - அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்-
திர்வரும் புதிய வரவு செலவு திட்டத்தில் கிடைக்கபெறும் நிதியை கொண்டு தோட்ட பகுதிகளை கிராமமயமாக்குவேன். மலையக தோட்ட தொழிலாளர்கள் வாழ்கின்ற லயன் வாழ்வை முற்றாக ஒழித்துக்கட்டி 5 வருட காலங்களில் கிராம வாழ்க்கைக்கு அவர்களை வழிநடத்தி செல்வதில் கட்சி பேதங்கள் காட்டப்படமாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன் என மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.

சாமிமலை ஸ்டத்ஸ்பி தோட்டம் மின்னா பிரிவில் மற்றும் லெட்புருக் பிரிவு ஆகிய பகுதிகளில் 12.10.2015 அன்று வீடுகள் கையளிக்கப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி செயலாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

லயன் வாழ்வில் இருந்து மக்களை கிராம வாழ்க்கைக்கு வித்திடுவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய செயலாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதியான எனக்கு கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற பாரிய பங்களிப்பை எனக்கு வழங்கியுள்ளனர். இதனை கொண்டு தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை திறக்க வைக்க நான் சேவையாற்றுவேன்.

இவ்வாறான பாரிய சேவையை முன்னெடுத்து செல்ல மக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு அவசியமாக இருக்கின்றது. உங்களுடைய ஒற்றுமையின் பலனே நான் சேவையை முன்னெடுக்க முதல் கட்ட வேலைகளை நான் செய்து வருகின்றேன் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

ஆண்டாண்டு காலமாக தோட்ட தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்ற பாரிய அடிப்படை வசதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளான குடிநீர் வசதி, காணி உரிமை, வீட்டு வசதி, கல்வி பிரச்சினை இன்னும் பற்பல பிரச்சினைகளை 5 வருட காலத்திற்குள் நிவர்த்தியாக்கும் பாரிய கடமை எனக்கு உண்டு. இதனடிப்படையில் மலையக மக்களின் ஒற்றுமையை வழுப்படுத்தி சேவையை முன்னெடுப்பேன்.

எனக்கு மலையக மக்கள் பேரம்பேச கூடிய சக்தியை வழங்கியுள்ளார்கள். இம்மக்களின் சக்திகளை வைத்து இவர்களின் எதிர்பார்ப்புகளும் மற்றும் அபிலாஷகளையும் நிறைவேற்றுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உரிமையுள்ளவர்களாகவும், ஏனைய சமூகத்தோடு சரிநிகராக வாழ வைப்பதே எனது நோக்கமாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -