முன்னாள் படைத் தளபதிகள் நால்வர் உட்பட ஐந்து பேரிடம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை..!

வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றிய அதிகாரிகள், அரசியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டமை தொடர்பில், முன்னாள் படைத் தளபதிகள் நால்வர் உட்பட ஐந்து பேரிடம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, முன்னாள் இராணுவ தளபதியும் தாய்லாந்துக்காக முன்னாள் இலங்கை தூதுவருமான ஷாந்த கொட்டேகொடவிடம் கடந்த 12ஆம் திகதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன். முன்னாள் விமானப்படை தளபதியும் பாகிஸ்தானுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான ஜயலத் வீரக்கொடியிடமும் அன்றையத் தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜப்பானுக்கான முன்னாள் தூதுவரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கருணாகொட மற்றும் முன்னாள் கடற்படை தளபதியுடம் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகருமான திஸர சமரசிங்க ஆகிய இருவரும் 13ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் குமார விஜயசிறியிடம் நேற்று புதன்கிழமை (14), நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -