தலவாக்கலை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் இம்மாதம் இறுதிக்குள் பாவனைக்கு..!

க.கிஷாந்தன்-
லவாக்கலை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் இம்மாதம் இறுதிக்குள் பொது மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் நுவரெலியா பிரதேச சபை, தலவாக்கலை லிந்துலை நகர சபை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை நகரசபையின் செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

சுமார் 7 கோடியே 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தலவாக்கலை பிரதேசத்திற்கு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி பஸ் தரிப்பு நிலையமாகும்.

இதில் மேல் மாடியில் கடை தொகுதியும் சிற்றூண்டிசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன் கீழ் தொகுதியில் தகவல் பரிமாறும் நிலையம் மற்றும் கடைகள், காரியாலயங்கள் என அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1 வருட காலத்திற்கு மேலான காலப்பகுதியில் பஸ் தரிப்பு நிலைய வேலைகள் பூர்த்தியடைந்தும் மக்களின் பாவனைக்கு வழங்க தாமதங்கள் ஏற்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.

போக்குவரத்து அமைச்சு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அங்கீகாரத்தை வழங்காத பட்சத்தில் இதுவரை காலமும் திறக்கப்படாமல் இருந்த இவ் பஸ் தரிப்பு நிலையம் எதிர்வரும் 30ம் திகதி அல்லது செப்டம்பர் 1ம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை 15.10.2015 அன்று காலை முதல் மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தில் இதர செயற்பாடுகள் மற்றும் சிறு வேலைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டு வருவதுடன் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -