பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணமாக்க துரித நடவடிக்கை..!

ம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆவணமாக்கப்படவிருக்கின்றன.அதற்கான துரித ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.அவ் ஆவணமாக்கல் நூல் நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை விசேட நிறைவேற்றுச்சபைக்கூட்டம் காரைதீவு சண்முகா மகா வித்தியாயலத்தில் பேரவைத்தலைவர் தேசமான்ய. ஜலீல் ஜீ தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் பெண் எழுத்தாளர்களின் படத்துடன் கூடிய சுயவிபரத்துடன் தமது படைப்புகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொகுப்பாளரும் தலைவருமான ஜலீல் ஜீ கேட்டுள்ளார். தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 077 3134818.

அதேவேளை மறைந்த பெண்எழுத்தாளர் பாண்டிருப்பு திருமதி க.லோகிதராஜாவிற்கான இரங்கல்நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி கல்முனை நால்வர்கோட்ட மண்டபத்தில் நடாத்தவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதில் “கமலதீபம்” எனும் நினைவுமலரொன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -