சிறுவர்களின் பாதுகாப்பை பெரியவர்களே உறுதி செய்ய வேண்டும் பிரதி அமைச்சர் அமீர் அலி..!

எம்.ரீ.எம்.பாாிஸ்-
சிறுவர்களின் பாதுகாப்பை பெரியவர்களே உறுதி செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பிள்ளைகள் இறைவன் கொடுத்த வரமாகும் அந்தவரத்தை பேணிப்பாதுகாக்கும் உண்ணத பொறுப்பு பெரியர்களிடமே உள்ளது எனவே எமது செல்வங்களாகிய சிறுவர்களின் பாதுகாப்பை பெரியவர்களும் பெற்றோர்களும் உறுதி செய்யவேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய தனது ஊடாக அறிக்கையிலயே பிரதி அமைச்சர் அமீர் அலி இதனைதெரிவித்தார்.தொடர்ந்தும் அந்த அறிக்கையில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

இன்றை சிறுவர்கள் நாளைய தலைவர்கள், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் எந்தவித்த்திலும் பாதிக்காத வண்ணம் பெரியவர்கள் நடந்துகொள வேண்டும் நல்ல ஒழுக்கமும் நற்பண்பும் கொண்ட நற்பிரஜைகளாக நாம் அவர்களை வளர்க்க வேண்டும்.

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்படவேண்டிய அதேதருணத்தில் அவர்களின் பாதுகாப்பு முதலாவது உறுதி செய்ய வேண்டும் சிறுவர்களை தனியார் வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் தமது வேலைப்பழு காரணமாக அவர்களை கண்கானிக்க தவருகின்றனர் இவ்வாறான அசமந்தப் போக்கின் காரணமாகவே சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்படுகின்றனர். 

எப்போதும் சிறுவர்களை பெற்றோரின் கண்காணிப்பில் வைத்துக்கொள்வதே அவர்களுக்கான பாதுகாப்பாகும் தனியார் வகுப்பு மற்றும் வேறு வெளித்தேவைகள் நிமித்தம் சிறுவர்களை நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே அனுப்புங்கள் அல்லது பெற்றோர்களே அவர்களை கூட்டிச்செல்லுங்கள் அதுதான் அவர்களுக்கான மிகச்சிறந்த பாதுகாப்பாகும்.

இன்று சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து ஒரு கலாச்சார பிரழ்வு நிலை ஏற்பட்டுள்ளது இது எதிர்காலசந்தினருக்கும் எதிர்கால இலங்கைக்கும் ஆரோக்கியமான விடயமல்ல இது தொடர்பில் சிறுவர் நலன்காக்கும் பலதிட்டங்களை நமது அரசு மேற்கொண்டு வருகிறது இதில் சிறுவர் பாதுகாப்பு மிகமுக்கிய விடயமாகும்.

பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கல்வியைப்புகட்டுங்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களாகவும் தன்நம்பிக்கையுள்ளவர்களாகவும் அவர்கள் செயற்பட கல்வி அவர்களுக்கு உதவும் சிறுவர்கள் வெள்ளைக் காகிதம் போன்று அழுக்கற்றவர்கள் புவைவிட மென்மையான இதயத்தை உடையவர்கள் பலவீனமானவர்கள் அவர்களை நெறிப்படுத்தி பாதுகாத்து இந்த சமூகத்தின் முன் நிறுத்த வேண்டிய உயர் பொறுப்பை பெரியவர்கள் சுமந்துள்ளார்கள்.

சிறுவர்களுக்கு அன்பு காட்டும் படி இஸ்லாம் போதிக்கின்றது ஏனைய மதங்களும் சிறுவர்மீதான கருணையை வழியுறுத்தி நிற்கிறது அந்த வகையில் சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து அவர்களை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -