சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் குழு அக்கரைப்பற்றுக்கு விஜயம் -படங்கள்

நிஸ்மி, அக்கரைப்பற்று-

ம்பாரை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் பைஸால் காஸீம் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் ஏ.எல்.தவம் அவர்களும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால உள்ளிட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் குழுவினரும் நேற்று (10) சனிக்கிழமை விஜயம் செய்தனர்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் குறை நிறைகளை கண்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்து மக்களுக்கான சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற் கொள்ளப்பட்டது.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் நேற்று மாலை பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் பைஸால் காஸீம் தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர்.

பிரதி அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் ஏ.எல்.தவம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால, சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு பணிப்பாளர் டாக்டர் கே.டி.சி.கே.குணவர்ததன, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் வருகை தந்தனர்.

அமைச்சர் குழுவினரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.ஏ.சி.ஏ.ஹையூ, உறுப்பினர்கள், திட்டமிடல் பிரிவு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபல், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குழுவினர்; அவசர வைத்திய சேவைப் பிரிவு, பிரசவ மற்றும் சிறுவர் வைத்தியப் பிரிவு, ஆண்கள் பெண்கள் விடுதிகள், மருந்துக் களஞ்சியம்,; என்பவற்றைப் பார்வையிட்டதோடு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் அவர்களிடம்; வைத்தியசாலையின் ஆளணி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் முதலியவற்றின் தேவைபற்றிக் கேட்டறிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் ஆளணி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் முதலியவற்றின் தேவைகள் பற்றி திட்டமிடல் பிரிவு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபல சபையில் விளக்கியதோடு, தேவைகள் அடங்கிய மகஜரை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.ஏ.சி.ஏ.ஹையூ பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் பைஸால் காஸீம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால ஆகியோர்களுக்கு வழங்கினார்.

சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் பைஸால் காஸீம அவர்களின் சேவையைப் பாராட்டி ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.ஏ.சி.ஏ.ஹையூ பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால அவர்களின் சேவையைப் பாராட்டி திட்டமிடல் பிரிவு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபல் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -