வாழைச்சேனை பாத்திமா அஸிமா எங்கே?

ந.குகதர்சன்-
ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பாலைநகர் பகுதியினைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா கடந்த 27.03.2013 அன்று பாடசாலைக்கு செல்லும் போது காணாமல் போயுள்ளார் இவரை கண்டுபிடித்து தருமாறும், இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இவரை கண்டுபிடித்து தருமாறும், இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி தியாவட்டவான் ஹீசைனியா ஜிம்மா பள்ளிவாயல் மற்றும் பாலை நகர் றகுமானியா ஜிம்மா பள்ளிவாயல்கள் இணைந்து வெள்ளிக்கிழமை ஜிம்மா தொழுகையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக கையில் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்று கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மேற்படி விடயம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரிடம் காணாமல் போயுள்ள பாத்திமா அஸிமாவின் பெற்றோர் கையளித்தனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது!

பாலை நகர் மத்ரஸா குறுக்கு வீதியைச் சேர்ந்த முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா எனும் மானவி கடந்த 27.03.2013 அன்று பாடசாலைக்கு செல்லும் போது காணமல் போயுள்ளார்.

இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் இதுவரை காணாமல் போன குறித்த மாணவி கண்டு பிடிக்கப்படவுமில்லை. இது குறித்து புலனாய்வு தொடர்பான முன்னேற்றங்கள் நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் அறிக்கையிடப்படவுமில்லை.

இதனால் இவ் மாணவியின் பெற்றோரும் இப் பிரதேசத்திலுள்ள அனைத்து பெற்றோர்களும் ஆழ்ந்த கவலையிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். எனவே குறித்த மாணவி கண்டு பிடிக்கப்பட வேண்டும். இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இக் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி குறித்த மகஜரினை பிரதேச மக்கள் சார்பாக பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத்திடம் கையளிப்பதுடன், இவ்வி;டயத்தை சிறுவர்கள் மீது அதி கூடிய கரிசனையுள்ள அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் உங்களது அலுவலகம் ஊடாக இம் மகஜரில் ஒரு பிரதியை அனுப்பி வைக்குமாறும், இக்குற்றத்துடன் தொடர்பான புலனாய்விற்கு பொறுப்பான உங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து ஓரு நல்ல தீர்வை பெற்றுத்தர உதவி செய்யுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரதிகள் ஜனதிபதி செயலகம், சிறுவர் பெண்கள் நலன் விவகார அமைச்சு, மாவட்ட செயலாளர் மட்டக்களப், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமை ஆணைக் குழு, சட்டமா அதிபர் அலுவலகம், பொலிஸ் தலைமைத் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவு, சிறுவர் நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர், காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழு, நிலையப் பொறுப்பதிகாரி வாழைச்சேனை ஆகியோர்களுக்கு பிரதிகள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -