அநீதி, அக்கிரமம், ஊழல், மோசடி போன்றவற்றுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக 'வார உரைகல்' எனும் பெயரில் வாராந்தப் பத்திரிகை, இணையதளம், டுவீட்டர் குறுஞ்செய்திச் சேவை போன்ற ஊடக வழிகளில் பல்வேறு இடையூறுகள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் புவி. எம்.ஐ. ஹ்மதுழ்ழாஹ்வுக்கு , மட்டக்களப்பு மாவட்ட அரசில்வாதி யொருவரின் அழுத்தங்களுக்கமைய காத்தான்குடி பொலீஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அஜித் பிரசன்ன என்பவர் தனது பொலிஸ் குழுவையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி புவி. எம்.ஐ. ஹ்மதுழ்ழாஹ் வீட்டில் கஞ்சா இருந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டொன்றை சுமத்தி அவரை கைது செய்து அவமானத்திற்குட்படுத்தியதை தாங்கள் அறிவீர்கள்.
இந்த அநியாயமான குற்றச்சாட்டை மறுத்து கடந்த இரண்டு வருட காலமாக அவர் நீதிமன்றத்தில் வாதாடி வந்ததன் பலனாக, கடந்த 06ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் என்னை நிரபராதி என விடுதலை செய்துள்ளது. அத்தீர்ப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி இன்றைய தினமே அவருக்கு வழங்கப்பட்டது. 16 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பின் பக்கங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்த்து குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக புவி. எம்.ஐ. ஹ்மதுழ்ழாஹ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இத்தீர்ப்பினைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியிடமிருந்து அவருக்குறிய நஷ்டஈட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர இருப்பதாகவும் தெரியவருகின்றது.