நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது.
தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப் பிரேரணைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.