முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை அந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
ஆட்சேபனையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசாரணைகளை சாதாரண முறையில் முன்னெடுத்து செல்வதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய ஆணைக்குழு முன்னிலையில் இன்று (16) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஏனையோரிடமும் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.
ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மஹிந்த ராஜபக்ஸவின் விளம்பரத்திற்கான 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக கட்டணத் தொகையை செலுத்தவில்லை என்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.