அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட சம்மேளனத்தினரால் நம் நாட்டில் இப்பொழுது எம்மத்தியில் வாழும் முக்கிய மூத்த சமூக சேவையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா அண்மையில் கல்முனையில் அல்-ஹாஜ். ஐ.எல்.ஏ. மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம். பசீல் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுக்கு 'மனித நேயம்' எனும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சம்மேளனத்தின் முக்கிய உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.