அதிபர்கள் பாடசாலையின் முகாமையாளர்கள், இவர்கள் முறையாக வழி நடத்த வேண்டும் - லாகீர்

எம்.ஆர்.வஜுர்டீன்-
பாடசாலையின் அதிபர்கள் அதன் முகாமையாளர்கள் அதன் கருமங்கள் அனைத்தையும் முறையாக முகாமை செய்ய வேண்டும் என மூதூரில் நடைபெற்ற சந்திப்பொன்றில் சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.

நேற்று மூதூர் வலயத்திலுள்ள பாடசாலைகளின் 88 அதிபர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்று செல்வி அகிலா தலைமையில் மூதூர் வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, கிழ்ககு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம். லாகீர் மற்றும் நாகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது மாகாணசபை உறுப்பினர் ஜே.எம். லாகீர் உரையாற்றும் போது இவ்வலயத்தில் 88 பாடசாலைகள் உள்ளன. இங்கு ஆசிரிய பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது. குpழக்கு மாகாண சபை கல்வி அமைச்சு வலப் பங்கீடை ஓரளவுக்கேனும் முறையாக பங்கீடு செய்ய வேண்டும்.

பௌதீக வளங்களும் குறைவாக உள்ளது. இதனை தீர்க்க வெளிநாட்டு நிறுவன உதவிகள் பெற்று தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆத்தோடு கிழக்கு மாகாண சபையுடைய ஆளணி பற்றாக்குறைகளை தீர்க்க மாவட்ட ரீதியாக உள்ள ஆளணி பற்றாக்குறையை கணக்கீடு செய்து மாவட்டத்தில் விண்ணப்பம் கூறி பற்றாக்குறைக்கு அமைவாக தீர்க்க முடியும். 

தமிழ,; சிங்களம், முஸ்லிம் என்று பிரிந்து விடாது அனைவரும் இலங்கையர் என ஒற்றுமைப்பட்டு 88 அதிபர்கள் என் நின்று விடாது வலயத்தில் ஒரு அதிபர் என்று செயற்படுகின்ற போது அனைத்தையும் தீர்க்கின்ற ஒரு யுகத்தை உருவாக்க முடியும்.

முhகாணத்தில் சிற்றூழியர் தேவை இருப்பதனால் புதிய வெற்றிடங்களை உருவாக்கி கிழக்கு மாகாண கல்வி அமைச்சு புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இம்முறை கல்வித் துறைக்கு அதிக நிதியினை ஒதுக்கியிருப்பதாக கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -