மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை..!

தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களை நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதற்கான கடிதம் உரியவர்களுக்கு 12/10/2015 தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நேர்முகப் பரீட்சை 19ஆம், 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவோர் குறித்த கடிதம், தேசிய அடையாள அட்டை, அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, திணைக்களத் தலைவர் மூலம் வழங்கப்பட்ட சேவைச் சான்றிதழ், ஆகக் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவற்றை சமாப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -