பொத்துவில் மீனவர்களுடன் மீன்பிடி அமைச்சரை சந்தித்தார் பிரதியமைச்சர் பைசால் காசிம்..!

எம்.ஏ. தாஜகான்-மக்சூத் முஹம்மட் றம்ஸான்-
பொத்துவில் கரைவலை மீனவர்கள் எதிர்நோக்கிய நீண்ட நாள் பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தை இன்று மீன்பிடி அமைச்சில் (16) இடம்பெற்றது.

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினையினை உடனடியாக தீர்வுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும், சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களின் இணைப்பாளருமான எம்.எச்.அப்துல் றகீம் அவர்கள் மேற்கொண்டதையடுத்து பொத்துவில் கரைவலை மீனவர்கள் இன்று (16) சுகாதாரப்பிரதியமைச்சர் பைசால்காசிம் அவர்களை சுகாதார அமைச்சில் சந்தித்து தங்களது பிரச்சினைகளை முன்வைத்தனர். 

மீனவர்கள் கடன்பட்டு கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும், தொழில் செய்ய அரசாங்கம் தடுத்தால் மீனவர்கள் தற்கொலை செய்வதாகவும், மீன்பிடி தொழிலில் பாதிப்படைந்த குடும்பத்தினர் நடுத்தெருவில் கையேந்தும் நிலை உருவாகும் என மீனவர்கள் சுட்டிக்காட்டினர். 

உடனடியாக இதற்குரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் பொத்துவில் கரைவலை மீனவர்களை அழைத்துக்கொண்டு மீன்பிடி கடற்றொழில் அமைச்சில் இன்று (16) 4.00 மணியளவில் மீன்பிடியமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களை உடனடியாக சந்தித்தார்.

இச்சந்திப்பினையடுத்து மீன்பிடியமைச்சர் தொடர்ந்தும் பொத்துவில் கரைவலை மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்குரிய அனுமதியினை வழங்கியுள்ளார். அதே வேளையில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் பொத்துவில் மீனவர்களுக்கு பாடு அனுமதியினை பெற்றுத் தருவதற்குமான ஏற்பாடுகளை செய்வதாக மீன்பிடி அமைச்சர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களிடம் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -