பொய் சாட்சியமளித்த ரக்னா லங்கா நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பொய்யான சாட்சியமளித்த ரக்னா லங்கா நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காமினி ஜயசுந்தரவின் செயற்பாடுகளினால் நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்து நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர குறித்த பொது முகாமையாளரை பணி நீக்கம் செய்துள்ளார்.
காமினி ஜயசுந்தர ஆணைக்குழுவின் முன்னிலையில் பொய் சாட்சியமளித்துள்ளதாகவும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணிகளை முன்வைக்க கால அவகாசம் கோரியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளா லெசில் டி சில்வா ரக்னா லங்க நிறுவனத் தலைவர் விக்டர் சமரவீரவிற்கு அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.