பதவியினை ராஜினாமா செய்தார் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்..!

அஸ்ரப் ஏ சமத்-
க்கள் சேவையை முழுமூச்சுடன் முன்னெடுக்கும் நோக்கில் கருத்தில்கொண்டு தான் பதவி வகித்த தென்னை பயிர் செய்கை சபை தலைவர் பதவியினை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நாட்டில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென்னை பயிர் செய்கை சபை தலைவராக ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டிருந்தார். 

இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்றம் தெரிவானதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பட்டியலில் இருந்த மூவர் மாகாண சபைக்கு தெரிவானார்கள்.

குறித்த மூவரில் ஹிதாயத் சத்தாரும் இடம்பெற்றிருந்த நிலையில் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த தென்னை பயிர் செய்கை சபை தலைவர் பதவியினை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

அரச நிறுவனங்கள் கூட்டுத்தபனங்கள் என்பற்றின் தலைவர்களில் மாற்றம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் சேவையை முன்னெடுக்கும் நோக்கில் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் பெருந்தோட்ட அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட அதேவேளை முன்னதாக குறித்த அமைச்சில் நியமிக்கப்பட்டிருந்த தலைவர்கள் தொடர்ந்து பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -