க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பகுதியில் பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழை காரணமாக அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டன் எம்.ஆர் நகர பகுதியில் 23.10.2015 அன்று பிற்பகல் 4 மணியளவில் சிறிய மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியின் போக்குவரத்து இடையூறாகவே காணப்படுகின்றது.
இதேவேளை அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனா். இதேவேளை பொகவந்தலாவ நகரமும் வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ளது.
தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றார்.