BCAS Campusயின் மட்டக்களப்பு வளாகத்தின் நான்காவது சான்றிதழ் வழங்கும் வைபவம் ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் கல்லூரி மண்டபத்தில் கடந்த (11/10/2015) ஞாயிற்றுக்கிழமை, வளாகத்தின் முகாமையாளர் 'மிர்ஸான்' அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக BCAS Campusயின் தவிசாளர் பொறியிலாளர் 'அப்துர் றகுமான்' அவர்களும், கௌரவ அதிதியாக' பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் UGC முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் தற்போதைய BCAS Campusயின் சிரேஷ்ட உயர்கல்வி பீடாதிபதியுமான பேராசிரியை திருமதி' ஷாணிகா ஹிரும்புரிகம' அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதுவரைசுமார் 800ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனது Degree foundation கற்கை மட்டக்களப்பு வளாகத்தில் பூர்த்தி செய்துள்ளமை மாணவர்களும் பெற்றோரும் BCAS மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
ஓவ்வொரு வருடமும் 11 சத வீதமானவர்களுக்குத்தான் அரச பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. மீதமுள்ளமாணவர்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் தனியார் உயர்கல்வி வாய்ப்புக்களை நாடிவருகின்றனர். அவ்வாறு அவர்கள் நாடிவரும்போது அவர்களின் நம்பிக்கையை வென்ற உயர்கல்வி நிறுவனமாக கடந்த 16 வருடங்களாக BCAS திகழ்கின்றது.
திருமதி ஷாணிகா ஹிரும்புரிகம போன்ற மிகப் பெரிய கல்வியாளர்களை முழு நேர உத்தியோகஸ்தர்களாக தன்னகத்தே கொண்டு செயல்படுவது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாரிய நம்பிக்கையினை அளிப்பதாகவும்' அவர் மேலும் குறிப்பிட்டார்.
அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய BCAS தலைவர் பொறியிலாளர் அப்துர் றகுமான்:-
தற்கால உலகம் கல்வியை மையமாக கொண்ட பொருளாதார உலகமாக மாறி வருகின்றது. விவசாயம், மீன்பிடித்துறை உட்பட எந்தவொரு துறையானாலும் சரி பொருத்தமான தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலமாகத்தான் எதிர்கால உலகினை வெற்றி கொள்ளமுடியும்.
உயர்கல்வி என்று வரும்போது அரச பல்கலைக கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தபிறகுதான் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் நாடவேண்டும்' என தெரிவித்தார்.
கௌரவ அதிதியாக் கலந்து கொண்ட BCAS யின் முன்னாள் தலைவரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தருமாகிய பேராசிரியை' ஷாணிகா ஹிரும்புரிகம' அவர்கள் தனதுரையின் போது' இலங்கையில் கிழக்கு மாகாணம் மிக செல்வச்செழிப்புடன் விளங்குகின்றது.
காரணம் வருமானம் தரக்கூடிய இயற்கைவளங்கள் இங்கு நிறைய உண்டு 'எனவும் 'மட்டக்களப்பு வளாகத்திலிருந்து இன்று சான்றிதழ் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் கல்வியினூடாக சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்று இந் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்' எனவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் 170 மாணவர்கள் தமது பட்டப்படிப்பிற்கான அடிப்படைப் பாடநெறியினைப் Degree foundation பூர்த்திசெய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் மேலும், BCAS வரலாற்றில் கல்குடா பிரதேசத்தில் இந்நிகழ்வு நடைபெற்றமை இதுவே முதல் தடவையாகும்.
இந்நிகழ்வில் கல்முனை வளாகத்தின் உயர்மட்ட ஆலோசகர் ஸூஹைர் காரியப்பார் உட்பட கல்முனை வளாகத்தின் உத்தியோத்தர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பியவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.