மைத்திரியே உனக்கும் கொடுங்கோலன் ராஜபக்சவுக்கும் என்ன வேறுபாடு - யாழில் போராட்டம்

பாறுக் ஷிஹான்-
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் இன்று காலை 7மணிக்கு யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர், மதத் தலைவர்கள் உட்பட அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, ‘அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே, ‘சிறை வாழ்வுதான் தமிழருக்கு நிரந்தரமா?’ அரசே தமிழர்களுக்கு ஓர் நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? மைத்திரியே உனக்கும் கொடுங்கோலன் ராஜபக்சவுக்கும் என்ன வேறுபாடு, அரசே அரசியல் இரட்டை வேடத்தை நிறுத்து’ ‘சர்வதேசம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்திய நிலையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -