ஞானசார தேரர் உள்ளிட்ட முக்கிய மூவர் இன்று நீதிமன்றில் சரணடைந்தனர்..!

கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனே முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். 

வழக்கு விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜராகாமை காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே, நேற்று திங்கட்கிழமை பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை அவமதித்தல் மற்றும் தேசிய பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியமை ஆகிய குற்றச்சாட்டுகளை இந்த நால்வருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த நால்வருக்கும் நேற்று திங்கட்கிழமை பிடிவிறாந்து பிறப்பித்த நீதவான், மேற்படி வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -