அஷ்­ரபின் மர்ம மரணம் குறித்து விசாரணை ...!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் ஆட்சிக் காலத்தில் ஹெலிகொப்டர் மூலம் பயணம் செய்த போது கேகாலை அர­நா­யக்­கவில் விபத்­துக்­குள்­ளா­ன­தாக கூறப்­படும் முன்னாள் முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியத் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரபின் விமான விபத்து தொடர்­பான விசா­ர­ணை­யையும் துரி­தப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களைக் கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்த இந்த தேசிய அர­சாங்கம் முன்­வர வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின்  (UPA)  தலை­வ­ரு­மான ஹுனைஸ் பாறுக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.  
கடந்த கால ஆட்­சியின்  போது நடை­பெற்ற படு­கொ­லைகள், மோச­டிகள், குற்­றங்கள் அனைத்தும் நல்­லாட்சி என்று சொல்­லப்­ப­டு­கின்ற ஆட்­சியில் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்­பது எமது எதிர்­பார்ப்­பாகும்.

குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், 

 இலங்கை முஸ்­லிம்­களின் குர­லா­கவும் முஸ்­லிம்­களின் அர­சியல் முக­வ­ரி­யா­கவும் இருந்­தவர் எம்.எச்.எம்.அஷ்ரப். முஸ்லிம் காங்­கிரஸ் என்ற கட்­சியை உரு­வாக்கி அனைத்து முஸ்­லிம்­க­ளையும் ஒன்று திரட்டி சரி­யான அர­சியல் பாதை­களை வகுத்து வழி­காட்­டிய அவரின் விபத்து முஸ்­லிம்­களின் மத்­தியில் இன்­று­வரை கேள்­விக்­கு­றி­யா­கவே இருந்து வரு­கின்­றது. 

நல்­லாட்சி என்று சொல்­லு­கின்ற தேசிய அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­களின் தேசியத் தலை­வ­ரான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரப்பின் விபத்து தொடர்­பா­கவும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  

மர்ஹும் அஷ்ரப் அவர்­களின் புகைப்­ப­டத்தை வைத்­துக்­கொண்டு அர­சியல் ஆதாயம் தேடு­ப­வர்கள் அவரை வைத்து வெற்றி பெற்­றதும் அமைச்­சர்கள் ஆனதும், வாய்­மூடி மெள­னி­க­ளா­கி­றார்கள். இது­வ­ரைக்கும் யாரும் அஷ்­ரபின்  மரணம் தொடர்­பாகப் பேசி குற்­ற­வா­ளி­களை இனங்­காண முடி­யாமல் மௌனம் சாதிப்­ப­துதான் புரி­யாமல் இருக்­கின்­றது. 

இவர்கள் அமைச்சுப் பத­வி­களைப் பெறு­வ­தற்­காக வேண்டி காட்­டு­கின்ற அக்­க­றையை தங்­களை வளர்த்த அந்தத் தலை­வரின் மரணம் தொடர்­பாக காட்­டாமல் இருப்­ப­துதான் இவர்­களின் வங்­கு­ரோத்து அர­சி­யலை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

ஆகவே இனியும் இத் தலை­வர்­களை நம்­பிக்­கொண்டு நாம் பொறுமை காக்க முடி­யாது. அனை­வரும் ஒன்றுபட்டு இவ்வரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதனூடாக மறைந்த தலைவரின் விபத்து தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -