அட்டாளைச்சேனையில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்..!

எஸ்.எம்.அறூஸ்-
கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று (2015-10-16) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிந்தவுர் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச சபைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தன. 

மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வடிகான்கள், வீதியோரங்கனில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்

விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.சலீம், அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி ஆகிய கிராமங்களில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -