மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானத்தை பிரதி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்..!

எம்.எம்.ஜபீர்-
ருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யுமாறு பாடசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து அதனை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக (14) நேரில் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.முஸ்தபா, எஸ்.உமர்மௌலான உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.

இதனை பார்வையிட்ட பிரதி அமைச்சர் 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எமது அமைச்சு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்ற போது ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கும் நிதிகளை ஒதுக்கீடு செய்து தருவேன் என தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -