சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தலும் நேற்று (01) சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.
சிறுவர் ஊடாக சமாதானம் என்ற தொனிப் பொருளில் வித்தியாலய அதிபர் எம்.ஐ.நயீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொத்துவில் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற மாவட்ட மற்றும் மஜிஸ்ட்றேட் நீதிபதி ஐ.பயாஸ் றஸ்ஸாக் அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளாகஅக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபீர் ; , ஆகியோர் கலந்து கொண்டனர்.;
நிகழ்வில் மாவட்ட மற்றும் மஜிஸ்ட்றேட் நீதிபதி ஐ.பயாஸ் றஸ்ஸாக் சிறப்புரை நிகழ்த்தியதோடு, கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம்,உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபீர் ஆகியோர்களும் உரையாற்றினார்கள். நிகழ்வில் மாணவர்களின் தமிழ், ஆங்கில, சிங்கள பேச்சு, பாடல், ஆடல் உட்பட நாடகங்களும் இடம் பெற்றன.