கோழியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பெரும் சிரமம்..!

எஸ்.அஷ்ரப்கான்-
ருதமுனையை அன்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களின் கோழியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளை வீசிவிட்டு செல்வதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பிரதேசவாசிகளும், பாதசாரிகளும்,மாணவர்களும், அரச ஊழியர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியானது மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியாக இருக்கின்றது. கல்முனை மாநகர சபையின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் சட்டதிட்டத்திற்கு முரணான வகையில் இக்கோழிக் கழிவுகளை அதிகாலை வேளை வீசிவிடுகின்றனர். 

குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அதிகளவான கோழிக் கழிவு மூடைகள் இவ்வீதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர். இது சம்பந்தமாக பொது அமைப்புக்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்தியும் அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருக்கின்றமையைஅவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள், இலத்திரணியல் உபகரணங்கள், பழைய போத்தல்கள் என்பவற்றையெல்லாம் வீசி வருகின்றனர். எனவே கல்முனை மாநகரசபை உரியவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் போது கோழிக் கடைகளின் கழிவுகளை உரிய முறையில் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காமல் அக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

எனவே களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை பொலிஸார், கல்முனை மாநகரசபை போன்றவற்றின் உயர் அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கைகளை உடன் எடுத்து பொதுமக்களுக்கான சுகாதார மேம்பாட்டை ஏற்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -