எம்.எம்.ஜபீர்-
தேசிய சுற்றாடல் பாதுகாப்பு 2016-2018 வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் பிரதான மரநடுகை வேலைத்திட்டம் நேற்று (15) வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தின் ஹிஜ்றா பள்ளிவாசல் வளாகத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரக்கன்டுகளை நாட்டிவைத்தார்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.மஜீட், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்களான எம்.எம்.உதுமாலெவ்வை, ஏ. நளீர், சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள், பிரதேச வாசிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.