அக்கரைப்பற்றில் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டம்..!

நிஸ்மி-
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களில் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழான சுத்திகரிப்பு வேலை இன்று (16) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகள் இணைந்து நேற்று காலை நடாத்திய இச் சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களும் கலந்து கொண்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் பேரில் எதிர்வரும் பருவ மழையைக் கருத்தில் கொண்டு கொடிய டெங்கு மற்றும் வெள்ளம் முதலியவைகளிலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிகான்கள் துப்பரவு செய்து தூர்ந்து போன வடிகான்களை ஆழமாக்கல், பொது இடங்கள், வீதியோரங்கள், பொதுச் சந்தை மற்றும் பஸ் நிலையங்கள் முதலியவற்றில் இச் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று – அம்பாரை வீதியில் அரசடிச் சந்தியில் இடம் பெற்ற இச் சுத்திகரிப்பு பணியின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எல்.எம்.சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இச் சுத்திகரிப்பு பணிகளில் அக்கரைப்பற்று மா நகர ஆணையாளர் ஏ.எல்.அஷ்மி, மாநகர சபை செயலாளர் ஏ.எம்.ஹபீபுர் ரஹ்மான், மிருக வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ஹம்தூனா, அக்கரைப்பறறு பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன், ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் திருமதி. வுp.கமலநாதன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எp.எம்.சரீப், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மாநகர அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாநகர சபை உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று- 19 கிராம அபிவிருத்தி சங்கம் சுத்திகரிப்பு பணியில் கலந்து கொண்டவர்களுக்கான ஆகாரம் மற்றும் குளிர்பானங்களை வழங்கியது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -