ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் அம்பாரை மாவட்டத்தின் புரட்சிகரமான அரசியல்வாதியும் என்று வர்ணிக்கப்பட்டு வருபவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மாணித்துள்ளதாக அக்கரைப்பற்றின் முக்கிய புள்ளி இம்போட்மிரர் ஊடகப் பிரிவுக்குத் தெரிவித்தார்.


குறிப்பிட்ட விடையம் சம்மந்தமாக இம்போட்மிரர் ஊடகப் பிரிவு அமைச்சர் அதாஉல்லாவை நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் போனது.

ஆனால் கட்சியின் முக்கிய புள்ளியும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையை தொடர்பு கொண்டு கேட்டபோது
இது விடையமாக தலைவர் அதாஉல்லாவிடம்தான் கேட்கவேண்டும். தலைவரின் கருத்தின் பின்னர்தான் தனது கருத்தினைக் கூறவிருப்பதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இம்போட்மிரர் ஊடகப்ப்பிரிவுக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -