நிந்தவூரில் சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு - பிரதம அதிதி கிழக்கு மாகான கல்விப்பணிப்பாளர்

நாசிறூன்-

ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்த மாணவ செல்வங்களை பாராட்டும் சிறப்பு நிகழ்வு நிந்தவூர் கமு/ அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இன்று 2015.10.31 ம் திகதி பாடசாலை அதிபர் ஹாஜியாணி திருமதி. MU. சித்தீக் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகான கல்விப்பணிப்பாளர் அல்- ஹாஜ் MT . நிஸாம் கலந்து கொண்டார். விஷேட அதிதியாக கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் ஜனாப். MS . அப்துல் ஜலீல் மற்றும் சிறப்பு அதிதியாக நிந்தவூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஜனாப். SL.சலீம் உட்பட பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்த மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இன்றைய இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்ட மாணவிகளுக்கு பல பெறுமதியான பரிசில்களும் நினைவுசின்னங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது. அத்துடன் இம்மாணவிகளை சிறப்பாக பயிற்ருவித்த ஆசிரிய ஆசிரியர்களும் அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -