இக்பால் அலி-
இலங்கையைச் நேர்ந்த ஏழு முஸ்லிம் நபர்கள் சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர வாத அமைப்புடன் இணைந்து கொள்ளும் நோக்குடன் மலேசியா, டுபாய், துருக்கி நாட்டு விமானம் நிலையம் ஊடாகச் சென்று சிரியாவுக்குச் சென்றுள்ளதாக இந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவிக்கின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்துள்ளவர்கள் எனக் கூறப்படும் ஏழு இலங்கையர்கள் இதற்கு முன்னர் மேற் குறிப்பட்ட நாடுகளின் ஊடாக சிரியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர வாதிகளுடன் சேர்ந்து தீவிரவாத செயற்பாடுகளுடன் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கொழும்பு, தெமட்டைகொடை, கிராண்பாஸ் மற்றும் கண்டி ஆகிய வதிவிடங்களைக் கொண்டவர்கள் எனவும் 20-40 வயது எல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடைய குடும்பம் தொடர்பாக புலாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைக்கு ஏற்ப அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்களுடன் எவ்வித தொடர்புகளும் அற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளனர்.
இதுவரைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அங்கத்தவர்கள் நூற்றுக்கு எண்பது விகிதமானவர்கள் இறந்துள்ளார்கள். இவ்வாறு இறந்துள்ளவர்களுக்குள்ளே இந்த ஏழு இலங்கையர்களும் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.