அம்பாந்தோட்டை, மத்தல விமானநிலைய சந்தியில் நிகழந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிபர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.