க.கிஷாந்தன்-
தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை பிரதான பஸ் நிலையப்பகுதியில் 14.11.2015 அன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினை தொழிலாளர் தலைவர்கள் மேற்கொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அம்பகமுவ தொகுதி அமைப்பாளர் பி.கல்யாணகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்தச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தலைவர்கள் தோட்டத் தலைவிகள் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டக்கம்பனிகளுடன் இதுவரை ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன.
இந்தக் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்புக்காக தோட்டக்கம்பனிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே 14.11.2015 அன்று பொகவந்தலாவையில் அடையாள சத்தியாக்கிரகப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.